ஆப்நகரம்

கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலை தீபாவளி பட்டாசுகள் விற்பனை

தமிழக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNN 25 Oct 2016, 2:26 am
சென்னை: தமிழக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil low rate diwali cracker sale in state co operative enterprises
கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலை தீபாவளி பட்டாசுகள் விற்பனை


தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தீவுத்திடல், பட்டாசு கடைகளின் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, மேடவாக்கத்தில் உள்ள மைதானம் ஆகிய இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு பட்டாசு விற்பனை சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக கூட்டுறவு நிறுவனங்கள் மூலமும் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை மையங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில், வெளிச் சந்தைகளை விட 50 சதவீதம் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: விற்பனை மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். சென்னையில் மட்டும் 20 இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் பட்டாசு விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, சுமார் ரூ.21 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டது என்றார்.
Low rate Diwali cracker sale in State co-operative enterprises

அடுத்த செய்தி