ஆப்நகரம்

அமெரிக்க மற்றும் இந்திய சந்தையை நொறுக்கிய டொனால்டு

அமெரிக்கத் தேர்தலும், பிரதமரின் கருப்புப் பண தடுப்பு அதிரடி நடவடிக்கையும் இணைந்து இந்திய பங்குச் சந்தையை வீழ்த்தியுள்ளது. இன்று காலை வரை சுமார் 5 சதவீதம் அளவிற்கு இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.

TOI Contributor 9 Nov 2016, 10:15 am
அமெரிக்கத் தேர்தலும், பிரதமரின் கருப்புப் பண தடுப்பு அதிரடி நடவடிக்கையும் இணைந்து இந்திய பங்குச் சந்தையை வீழ்த்தியுள்ளது. இன்று காலை வரை சுமார் 5 சதவீதம் அளவிற்கு இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.
Samayam Tamil donald trump and pm modi are the reasons for sensex nifty open more than 5 down
அமெரிக்க மற்றும் இந்திய சந்தையை நொறுக்கிய டொனால்டு


டொனால்டு முன்னிலை என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பங்குச் சந்தையான வால் ஸ்டிரீட் ,சுமார் 15 நிமிடங்களில், ரூ. 7 லட்சம் கோடியை இழந்துள்ளது.

பிரதமர் மோடி நேற்று இரவு அதிரடியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் அல்லது மத்திய நிதியமைச்சர் என்று யாரும் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. பிரதமரே முன் வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு இந்திய பாமரனுக்கும் அதிர்ச்சியை அளித்தார். இந்தியப் பொருளாதாரம் தற்காலிகமாக முடங்கும் என்று பயந்தாலும், நீண்ட கால இந்திய பொருளாதாரத்திற்கு தேவையான அதிரடி நடவடிக்கையை பிரதமர் எடுத்தார் என்றே கூறலாம்.

இவரது இந்த அதிரடி அறிவிப்பாலும், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளாலும், இன்று காலை சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகளை இழந்தது. அதாவது 5.5 சதவீதம் சரிவை சந்தித்தது. நிஃப்டி 505 புள்ளிகளை இழந்து 6 சதவீத சரிவை சந்தித்தது.

சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ், எம்&எம், ஆகியவற்றின் பங்குகள் சரிவை சந்தித்தன. ரியல் எஸ்டேட் இன்டெக்ஸ் 12 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் ஒழிப்பால் இந்திய ரியல் எஸ்டேட் பெரிய அளவில் சரிவை சந்திக்கும் என்றும், அதே நேரம் வீடுகளின் விலை குறையும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து ஜப்பான், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகளும் சரிந்தன.

அடுத்த செய்தி