ஆப்நகரம்

ஹிலாரிக்கு ஆதரவாக இசை நிகழ்ச்சி நடத்திய ஜெனிபர் லோபஸ்!

புகழ் பெற்ற பாப் பாடகியான ஜெனிபர் லோபஸ் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

TOI Contributor 30 Oct 2016, 6:09 pm
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஜெனிபர் லோபஸ் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
Samayam Tamil jennifer lopez performs in miami for hillary clinton
ஹிலாரிக்கு ஆதரவாக இசை நிகழ்ச்சி நடத்திய ஜெனிபர் லோபஸ்!


அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் ஹிலாரிக்கு ஆதரவாகவே உள்ளது. இந்நிலையில் ஹிலாரி குறித்த இ-மெயில் சர்ச்சைகள் மீண்டும் கிளம்பியுள்ளன. இது ஒரு புறம் இருக்க உலகப்புகழ் பெற்ற பாப் இசை பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் மியாமி நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இவர் தனது பிரபலமான பாடலான “லெட்ஸ் கெட் அவுட்”, “ஆன் தி புளோர்” ஆகிய பாடல்களுக்கு நடனமாடினார். இந்த இசை நிகழ்ச்சியின் போது மழை வந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இசையை கேட்டு மகிழ்ந்தனர்.

ஜெனிபர் லோபசின் முன்னாள் கணவர் மார்க் அந்தோணியின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இசை நிகழ்ச்சி முடியும் தருவாயில் மேடைக்கு வந்த ஹிலாரி, மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது டிரம்பை தோற்கடிப்பது மக்கள் கையில் தான் உள்ளது என்றும், எந்த மாதிரியான குற்றச்சாட்டை சுமத்தினாலும் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஹிலாரி கூறினார். மக்கள் எல்லோரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி