ஆப்நகரம்

Asian Games: பதக்க வேட்டையைத் தொடருமா இந்தியா; ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

Samayam Tamil 18 Aug 2018, 9:25 am
ஜகர்த்தா: ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
Samayam Tamil Asian Games


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக 2014ல் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் என 57 பதக்கங்களை பெற்றது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்தது.

கடந்த 2010ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தான் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. அதாவது 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என 65 பதக்கங்களை வென்றது.

இந்நிலையில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் இன்று மாலை தொடங்குகிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்கின்றன.

இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், இந்திய தேசியக் கொடியை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஏந்திச் செல்கிறார். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை முதல் போட்டிகள் நடைபெற உள்ளன.

மொத்தம் 40 விளையாட்டுகள் 462 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன. இந்தியா சார்பில் சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட 542 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் இந்தியாவிற்கான பதக்க வேட்டையைத் தொடர்ந்து புதிய சாதனைகள் படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

18th edition of Asian games is set to begin today.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்