ஆப்நகரம்

Bridge : இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த 60+ வயதான வீரர், வீராங்கனைகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் 60 வயதை தாண்டிய இந்திய வீராங்கனைகள் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

Samayam Tamil 27 Aug 2018, 10:15 pm
ஆசிய விளையாட்டு போட்டியில் 60 வயதை தாண்டிய இந்திய வீராங்கனைகள் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
Samayam Tamil Hema Deora bridge.jgp


ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018 இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பாலேம்பேங் நகரில் நடைப்பெற்று வருகின்றது.

முதன் முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீட்டாட்டப் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள், கலப்பு என அணி போட்டியாகவும், ஆண், பெண் தனி நபர் போட்டியும் நடத்தப்படுகிறது.

2 வெண்கல பதக்கங்கள்;
இந்த போட்டிகளில் ஆண்கள் குழு மற்றும் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி இரட்டை வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளன.

60+ வயது போட்டியாளர் :
இந்த போட்டியில் 67 வயதான ஹேமா தியோரா, கிரண் நாடான் ஆகியோருக்கு இணையாக 79 வயதான ரீட்டா சோக்‌ஷியும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.


தனது 50 வயது வரை தன் மகன்களை வளர்த்தெடுப்பதிலும், வீட்டை பராமரிப்பதிலும் செலவிட்டதோடு, தன் கணவரும் இந்தியாவின் முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவுடன் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டவர்.


அதே போல் 79 வயதான ரீட்டா சோக்‌ஷியின் உள்ளார். இவர் 1970களிலிருந்து பிரிட்ஜ் விளையாட்டை விளையாடி வருகின்றார். அப்போது ஒரு போட்டியின் போது ஒரு மருத்துவரை பார்த்தார். அவரும் பிரிட்ஜ் விளையாட்டில் இணைந்தார். இந்த சூழலில் தன் கணவர் உயிரிழந்தார். இதையடுத்து தன்னுடன் சேர்ந்து விளையாடும் மருத்துவர் 2வது வாழ்க்கை துணையானார்.




சிறிது காலத்திலேயே தன் இரண்டாவது கணவரும் உயிரிழந்தார். இருந்தாலும் தன் மன உறுதியை கைவிடாமல் தொடர்ந்து பிரிட்ஜ் விளையாட்டில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள், விருதுகளைப் பெற்று வருகின்றார்.


இப்படி இந்தியா பிரிட்ஜ் விளையாட்டு ஆண்கள், பெண்கள் அணியில் வயதான போட்டியாளர்கள் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்