ஆப்நகரம்

Asian Games 2018: துடுப்பு படகு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி!

ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவின் துடுப்பு படகு அணி தங்கம் வென்றுள்ளது.

Samayam Tamil 24 Aug 2018, 11:42 am
ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவின் துடுப்பு படகு அணி தங்கம் வென்றுள்ளது.
Samayam Tamil 65523472


இந்தோனேஷியாவில் நடைபெற்றும் வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான இலகுர துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இந்நிலையில் 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த சவார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 6 நிமிடம், 17.13 வினாடிக்குள் கடந்து சாதனை படைத்துள்ளனர். மேலும் இந்த போட்டியில் இந்தோனேஷிய அணி வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.

இந்தியாவிற்கு இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம்21 பதக்கங்கள் கிடைத்துள்ளது. மேலும் தரவரிசைப் பட்டியலில் 9 வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்