ஆப்நகரம்

ஆசியப் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர்! டீ விற்று பிழைப்பு நடத்தும் சோகம்!!

ஆசியப் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர் ஹரிஷ் குமார், வயிற்றுப் பிழைப்புக்காக டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Samayam Tamil 7 Sep 2018, 7:01 pm
ஆசியப் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர் ஹரிஷ் குமார், வயிற்றுப் பிழைப்புக்காக டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Samayam Tamil Harish-Kumar-sep7


அண்மையில் நடந்த ஆசியப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை வென்று சாதித்தது. இதில், ஹரிஷ் குமார் எ்பவர் செபக்டக்ராவ் அணியோடு சேர்ந்து விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இவரோ, தற்போது டீ விற்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

பிறப்பிலேயே ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த இவரது தந்தை டீ கடை நடத்தி வந்தார். தந்தையின் கஷ்டத்தை தன் தோளில் சுமந்த இவர், விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கொடுத்து விட்டு, தந்தைக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

இது குறித்து ஹரிஷ் குமார் கூறியதாவது: ‘நான் 2011ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டில் தீவிரமாக உள்ளேன். என்னுடைய கோச் ஹேமராஜ் என்பவர் தான் என்னை ஊக்கப்படுத்துவார். ஏழ்மை என்பது பிறப்பிலேயே இருந்தது. அது எனது வாழ்க்கையை தீர்மானிக்காது. விளையாட்டு ஆணையம் மூலம் தற்போது எனக்கு உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவுக்காக பதக்கம் வென்றதில் பெருமையாக உள்ளது’

இவ்வாறு அவர் தெரிவித்தார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்