ஆப்நகரம்

Deepak Kumar: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றாா் தீபக் குமாா்

இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரின் 10 மீ. ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் தீபக் குமாா் வெள்ளிப் பதங்கம் வென்றாா்.

Samayam Tamil 20 Aug 2018, 12:37 pm
இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரின் 10 மீ. ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் தீபக் குமாா் வெள்ளிப் பதங்கம் வென்றாா்.
Samayam Tamil Deepak Kumar


18வது ஆசிய விளையாட்டுத் தொடர் இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 10 மீ. துப்பாக்கிச் சுடுதல் (ஏா் ரைபில்) பிரிவில் இந்தியாவின் தீபக் குமாா் இறுதி சுற்று வரை முன்னேறினாா். தீபக் குமாா் 247.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். 249.1 புள்ளி பெற்ற சீனாவின் யாங் ஹாவோரன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா்.


தற்போது வரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா 9 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்