ஆப்நகரம்

Pullela Gopichand: ஆசிய விளையாட்டு - சிந்து, சாய்னாவுக்கு கோபிசந்த் பாராட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டனில் பதக்கத்தை உறுதிசெய்த சிந்து, சாய்னாவுக்கு பயிற்சியாளர் கோபிசந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Aug 2018, 4:34 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டனில் பதக்கத்தை உறுதிசெய்த சிந்து, சாய்னாவுக்கு பயிற்சியாளர் கோபிசந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Gopichand-Social_opt


18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த யமகூச்சியை 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா சார்பில் பங்கேற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சீனாவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை தை சூ யிங்கிடம் தோற்று வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தார்.

இது பற்றி ஜகர்தாவில் இருக்கும் பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபி சந்துவுடன் தொடர்பு கொண்டு சமயம் தமிழ் பேசிய போது, இன்றைய இரண்டு போட்டிகளின் முடிவுகளுமே மகிழ்ச்சியைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார். “சாய்னா தான் இன்று விளையாடிய விதத்தை எண்ணி பெருமை கொள்ளலாம். அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒலிம்பிக், உலகக் கோப்பை, ஆல் இங்லேண்ட், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு அவர் தவறவிட்டிருப்பது இதுதான். இது அவரது சிறந்த சாதனை.” என்று கோபி கூறினார்.

சிந்து இறுதிப்போட்டிக்குத் முன்னேறியது பற்றிக் கூறும்போது, சிந்து இரண்டாவது செட் பறிபோனதால் கவனத்தை இழக்காமல் இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றார். “முடிவைத் தீர்மானிக்கும் செட்டில் அவர் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள வீராங்கனையை வீழ்த்தியிருக்கிறார். இது நாளைய இறுதிப்போட்டிக்கு சிறப்பான முன்னோட்டம். நாளை இறுதிப்போட்டியில் தை சூ யிங்கை எதிர்கொள்ள அவர் இப்போதே தயாராக இருப்பார்.” என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்