ஆப்நகரம்

வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு: தமிழக அரசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Aug 2018, 3:47 pm
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
Samayam Tamil dharun_ayyasamy
தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு


இந்தோனேஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வரும் 2018 ஆசிய விளையாட்டு போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் இந்தியாவை சேர்ந்த தருண் அய்யாசாமி 48.96 விநாடிகளில் வெற்றி இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழ்நாட்டின் திரூப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி இந்த வெற்றியின் மூலம் தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது வெற்றிக்கு பல தரப்பினர் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தையும், இந்தியாவையும் பெருமை அடையச் செய்த வீரர் தருண் அய்யாசாமிக்கு பாராட்டுதலை தெரிவித்து ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி, தந்தையை இழந்த நிலையில் தாயார் பூங்கொடி மற்றும் தங்கை சத்யாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தருண் அய்யாசாமிக்கு படைத்த சாதனை, அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவிக்கிறார் அவரது தாயார் பூங்கோடி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்