ஆப்நகரம்

அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை குற்றச்சாட்டு!!

ஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் டெல்லி அரசு எனக்கு உதவி செய்திருந்தால் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Sep 2018, 12:21 pm
ஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் டெல்லி அரசு எனக்கு உதவி செய்திருந்தால் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை குற்றச்சாட்டு!!
அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை குற்றச்சாட்டு!!


இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது ஆசியப்போட்டிகள், கடந்த சில வாரங்களாக நடைபெற்றன. இதில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாகசெயல்பட்டு, 15 தங்கம், 24 வெள்ளி 30 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 69 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, இதில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் மாறி மாறி பரிசுத் தொகையை அளித்து வருகின்றன.

இந்நிலையில், ஆசியப் போட்டியில், பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற டெல்லியைச் சேர்ந்த திவ்யா கக்ரன், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றேன். அப்போது நீங்கள் எனக்கு எதிர்காலத்தில் அதிக உதவி செய்வதாக கூறினீர்கள். ஆனால், நான் உதவி கேட்டபோது, எனக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இப்போது என்னை வாழ்த்தி, பரிசுகளை வழங்குகிறீர்கள். ஆனால், எனக்கு உண்மையில் உதவி தேவைப்பட்ட போது நீங்கள் வழங்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், தனக்கு முறையாக உதவி செய்திருந்தால், நான் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் என கூறியுள்ளார்.

மத்திய அரசு விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் வகையில், பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர், மாநில அரசின் மீது குற்றம் சாட்டியிருப்பது, அதிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்