ஆப்நகரம்

CWG 2022: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 18 வது தங்க பதக்கம்; காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

காமன்வெல்த் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா தானாக பதக்கம் வென்றது

Samayam Tamil 8 Aug 2022, 2:41 pm
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் குத்துச்சண்டை போட்டி ஆண்கள் பெண்கள் என இரண்டு பிரிவிலும் சிறப்பாக விளையாடி, குத்துச்சண்டை போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
Samayam Tamil இந்திய வீரர்கள்


தடகள போட்டியிலும் தங்கம்

தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தையும், இதே போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

டேபிள் டென்னிஸில் பிரிவிலும் தங்க பதக்கம்

தொடர்ந்து நேற்று நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸில் இறுதி போட்டியில் இந்திய தரப்பில் ஜீடி ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி, மலேசியாவின் ஜாவன் சூன் - கரேன் லைனை எதிர்த்து விளையாடினர். இந்த போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி 3-1 என்ற கணக்கில் மலேசியா அணி ஜோடிகளை வீழ்த்தி இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்க தங்கப்பதக்கத்தை கைப்பற்றி கொடுத்துள்ளது.

பதக்க பட்டியலில் முன்னிலை

நேற்றைய தினம் குத்துச்சண்டை போட்டி ஆண்கள் பெண்கள் என இரண்டு பிரிவிலும் சிறப்பாக விளையாடி, குத்துச்சண்டை போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. மேலும் டேபிள் டென்னிஸில்லும் ஒரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றி, இந்தியா 18தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல பதக்கம் உட்பட மொத்தம் 47 பதக்கங்களுடன் இந்தியா 5 வது இடத்தில் நீடித்து வருகிறது. ஆஸ்திரேலியா 66 தங்கம், 55 வெள்ளி, 53 வெண்கல பதக்கம் உட்பட 174 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 55 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கல பதக்கம் உட்பட 166 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்