ஆப்நகரம்

துப்பாக்கிச் சுடுதலில் இரட்டை பதக்கம் - 16 வயது மனு பாக்கர் தங்கம்

காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு மனு பாக்கர் தங்க பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2018, 10:05 am
காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு மனு பாக்கர் தங்க பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.
Samayam Tamil manu 1


ஆஸ்திரேலியாவின், கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்று காலை நடந்த பெண்கள் 10மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக இறுதிச் சுற்றில் மனு பாக்கர் மற்றும் ஹீனா சிந்து தகுதி பெற்றனர்.

மேலும் படிக்க : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ரவி குமார் வெண்கல பதக்கம் வென்றார்

16 வயது:

இதில் 16 வயதே ஆன மனு பாக்கர் மொத்தம் 240.9 பெற்று புதிய கமன்வெல்த் சாதனையை படைத்துள்ளார். மேலும் இவர் தகுதிச் சுற்றில் 388/400 புள்ளிகள் பெற்றார்.


அதே போல் ஹீனா சிந்து 2வது இடம் பிடித்து பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் வென்று பதக்க பட்டியலில் 3வது இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்