ஆப்நகரம்

இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்று அசத்தல்

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2018, 4:50 pm
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
Samayam Tamil TT


21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. 5வது நாளான டேபிள் டென்னிஸ் ஆண்கள் குழு இறுதிப் போட்டி நடைப்பெற்றது.

இதில் இந்திய அணி நைஜீரியா அணியை எதிர் கொண்டது.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த குழு போட்டியில், இந்தியாவின் சரத் கமல் அசந்தா, ஜி சத்யன், தேசாய், ஞான சேகரன் அடங்கிய ஆடவர் அணி நைஜீரியாவை 3-0 என வென்று தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடந்த மகளிருக்கான டேபிள் டென்னிஸ் அணி போட்டியில் இந்திய பெண்கள் தங்க பதக்கம் வென்று சாதித்தனர்.


இதன் மூலம் இந்திய அணி 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கல பதக்கத்துடன் 3வது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்