ஆப்நகரம்

காமன்வெல்த் போட்டியில் பதக்க சாதனை செய்த இந்தியா

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று அதிகபட்ச பதக்கங்கள் வென்ற பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 3:23 pm
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று அதிகபட்ச பதக்கங்கள் வென்ற பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
Samayam Tamil gold-coast


ஆஸ்திரேலியாவின், கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 66 பதக்கங்கள் வென்றுள்ளது.

3வது அதிகபட்சம் :
இந்தியா காமன்வெல்த் போட்டியில் மிக குறைந்த அளவில் போட்டியாளர்களை பங்கேற்க அனுப்பினாலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளது.

கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 66 பதக்கங்கள் வென்றுள்ளது. இது இந்தியா பெறும் 3வது அதிகபட்ச பதக்கங்களாக உள்ளது.

இதற்கு முன்னர் 2010ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 101 பதக்கங்கள் வென்றது தான் அதிகபட்சமாக உள்ளது.

பதக்க பட்டியல் விபரம் :


டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அதிக பட்சமாக 101 பதக்கங்களும், 2002ல் மேன்செஸ்டரில் நடந்த போட்டியில் 69 பதக்கங்களும், தற்போது கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த போட்டியில் 66 பதக்கங்களும், 2014ல் ஸ்காட்லாந்து, கிளாஸ்கிலோவில் நடந்த போட்டியில் இந்தியா 64 பதக்கங்கள் பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்