ஆப்நகரம்

பாகிஸ்தான் அணியிலும் விளையாடும் தோனி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாயலில் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.

TNN 18 Jun 2017, 1:09 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாயலில் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
Samayam Tamil misbahs gone so is dhonis long hair 10 years since wt20 final
பாகிஸ்தான் அணியிலும் விளையாடும் தோனி!


சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.



இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், “பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாயலில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.



“பார்க்க மட்டும் தோனி மாதிரி இல்லை. களத்திலும் தோனியைப் போல திட்டமிட்டு விளையாடுகிறார். ஆனால், தோனி தனித்தன்மையானவர்.” என்று மிஸ்பா தெரிவித்துள்ளார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்