ஆப்நகரம்

இங்கிலாந்து அணி டிக்ளேர்: பென் ஸ்டோக்ஸ் மிரட்டல் சதம்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 18 Jul 2020, 9:37 am
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தொடக்க ஆடக்காரர் டோமினிக் சிப்ளே (120 ரன்கள்) , பென் ஸ்டோக்ஸ் (176 ரன்கள்) சதம் விளாசி அசத்தினர்.
Samayam Tamil england declared in second test first innings against west indies


டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. முதல்நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துத் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் கேப்டன் ஜோ ரூட் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து விளையாடி 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின், டோமினிக் சிப்ளே, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வலுவான பாட்னர்ஷிப் அமைத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களைத் திணறடித்தனர்.

டோமனிக் சிப்ளே 372 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளின் உதவியுடன் 120 ரன்கள் எடுத்தார். துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 356 பந்துகளைச் சந்தித்து 17 பவுண்டரிகள், 2 சிக்சர்களின் உதவியுடன் 176 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.

england Vs West indies:வெஸ்ட் இண்டீஸ் பெளலர்களை தெறிக்கவிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!!

கடுமையாக போராடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 31ஆவது ஓவருக்குப் பின், 125ஆவது ஓவரில் விக்கெட் வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டது. 125ஆவது ஓவரை வீசிய ரோஸ்டன் சேஸின் சுழலில் டோமினிக் சிப்ளே மாட்டிக்கொண்டு ஆட்டமிழந்தார். அதன்பின், ஒல்லி போப் (7 ரன்கள்) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (176 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு 40 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டாம் பெஸ் 31 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 469 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் மீண்டும் கங்குலி?

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மான்செஸ்டர் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரோஸ்டன் சேஸ் நிகழ்த்தியுள்ளார். கேமர் ரோச் 2 விக்கெட்களும், அல்ஜாரி ஜோசப், ஜெசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்