ஆப்நகரம்

ரன் மிஷின் கோலிக்கு இந்த நிலைமையா.. ஐயகோ!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 18 Feb 2020, 9:58 am
நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி டி 20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதன் பின் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பரிதாபமாக இழந்திருந்தாலும் தற்போது டி 20 தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளதால் இந்திய அணியும், வீரர்களும் எந்தெந்த இடங்களைப் பிடித்துள்ளனர் என்று பார்க்க ரசிகர்களிடையே ஆவல் அதிகமானது.
Samayam Tamil ரன் மிஷின் கோலிக்கு இந்த நிலைமையா


டி20 தொடரை இந்திய அணி வென்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர்களில் ஒருவர் கே.எல்.ராகுல். அந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 56 ரன்கள் அவர் சேர்த்தன் விளைவாக டி20 பேட்டிங் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவும் பட்டியலில் ஏற்றம் கண்டுள்ளார். இரண்டு இடங்கள் முன்னேறி அவர் 11ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவு சிறப்பான பங்களிப்பை அளிக்காத கேப்டன் விராட் கோலி சரிவைச் சந்தித்துள்ளார். அந்தத் தொடரில் 105 ரன்கள் மட்டுமே அடித்த கோலி ஏற்கெனவே இருந்த 9ஆம் இடத்தைவிட்டு ஒரு இடம் இறங்கி 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ரோஹித் இடத்தை நிரப்ப முடியுமா? பயிற்சி ஆட்டத்தில் கிடைத்த பதில்!

டெஸ்ட், ஒருநாள் தரவரிசைப் பட்டியல்களில் பேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் வலம் வரும் கேப்டன் கோலி டி20 போட்டியில் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

AB de Villiers: மீண்டும் வருவாரா மிஸ்டர் 360 டிகிரி?

அணிகளின் பட்டியலில் இந்திய அணிக்கு 4ஆம் இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் அணி முதலிடத்தை அலங்கரிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் யாரும் முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை. பும்ரா இருபத்தாறு இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் இந்திய அணி வீரர்களுக்கு இடமில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்