ஆப்நகரம்

ஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி!

லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 20வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Samayam Tamil 16 Jun 2019, 12:36 am

ஹைலைட்ஸ்:

  • ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 153 ரன்கள் விளாசினார்.
  • இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணியில் ஸ்ரீவர்தனே சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெஹண்டிராப் அணியில் இடம் பிடித்தார்.
பின்ச் பிரமாதம்:
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், 132 பந்தில் 15 பவுண்டரி, 5 சிக்சர் என 153 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்மித் (73) அரைசதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது.


கருணரத்னே அபாரம்:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு குசல் பெரேரா (52) அரைசதம் அடித்து கைகொடுத்தார். பின் வந்த திரிமன்னே (16), குசல் மெண்டிஸ் (30) நிலைக்கவில்லை.


பின் வந்த மாத்யூஸ் (9), ஸ்ரீவர்தனா (3), திசாரா பெரேரா (7) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் கருணரத்னே (97) மேக்ஸ்வெலின் மிரட்டல் கேட்ச்சில் வெளியேறினார். பின் வரிசை வீரர்கள் சொதப்ப, இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் வென்றார்.

ஒருநாள் அரங்கில் அதிக தோல்வியை சந்தித்த அணிகள் பட்டியல்
417 இந்தியா/ இலங்கை *
412 பாகிஸ்தான்
370 நியூசிலாந்து/ விண்டீஸ்
365 ஜிம்பாப்வே
331 இங்கிலாந்து
324 ஆஸ்திரேலியா

அடுத்த செய்தி

டிரெண்டிங்