ஆப்நகரம்

விஜய் சங்கருக்கு என்ன ஆச்சு... உலகக் கோப்பையில் விளையாடுவாரா?- பிசிசிஐ விளக்கம்

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 May 2019, 5:15 pm
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Vijay Shankar


உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்க உள்ளது.

தொடர் துவங்குவதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் விளையாட இந்திய அணி மே 22ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றதோடு, அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: திணறும் இந்தியா

விஜய் சங்கர் காயம் :
நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிகர் தவான் காயம் அடைந்த நிலையில், விஜய் சங்கரின் வலது தோள் பட்டையில் காயமடைந்துள்ளார்.

கலீல் அகமது வீசிய பந்து வலது கையின் தோள் பட்டையில் பலமாக தாக்கியது. இதையடுத்து பிசிசிஐ.,யின் மருத்துவ குழு விஜய் சங்கரை பரிசோதனைக்கு அனுப்பியது.

நான் இல்லாத கிரிக்கெட்டா? உலகக் கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் விளையாட கிளம்பிய அஸ்வின்!

பிசிசிஐ அறிக்கை:
விஜய் சங்கரை ஸ்கேன் செய்து சோதித்து பார்த்ததில் அவருக்கு எந்த ஒரு பெரிய காயமோ, எலும்பு முறிவோ இல்லை.

உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத ரஹானே இங்கிலாந்தில் சதம் அடித்து அசத்தல்!


அதனால் அவரின் உடல்நிலை சரிசெய்ய பிசிசிஐ மருத்துவக் குழு தீவிரமாக முயற்சித்து வருகின்றது. விரைவில் அவர் அணிக்கு திரும்புவார் என நம்புகிறோம் என பிசிசிஐ டுவிட் செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்