ஆப்நகரம்

OLD Trafford: வரலாற்றில் இடம்பெற்ற ரோகித் சர்மா: இங்கிலாந்தில் படைத்த மிக முக்கிய சாதனை

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

Samayam Tamil 17 Jun 2019, 1:34 pm

இந்திய வீரர் ரோகித் சர்மா நேற்று உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இந்திய வெற்றிக்கு பேருதவி செய்துள்ளார்.
Samayam Tamil Rohit Sharma Century


உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்கிறது.

ரோகித் சர்மா அடித்த சதம் மூலம் வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்துள்ளார்.
பொதுவாக இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்காகவே தயார் செய்யப்பட்ட மைதானம் தான் நேற்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைப்பெற்ற மான்செஸ்டர் எமிரேட் ஓல்டு ட்ரஃபார் மைதானம்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணிக்கு 20 ரன்களை குறைத்த விராட் கோலி

வரலாற்றில் இணைந்த ரோகித் சர்மா:
இந்த மைதானத்தில் 1896ல் நடந்த போட்டியில் இந்தியா சார்பாக அறிமுக வீரராக களமிறங்கிய குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்கிஜ் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

இந்திய அணிக்கு புது சிக்கல் உருவெடுத்திருக்கும் புவனேஸ்வர் குமாரின் காயம் - எத்தனை போட்டியில் விளையாட மாட்டார் தெரியுமா?

அதன் பின்னர் 1936ல் நடந்த போட்டியில் விஜய் மெர்சன் மற்றும் முஸ்தக் அலி இருவரும் சதம் விளாசி அசத்தினார். இருவரும் 203 ரன்கள் இணைந்து எடுத்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த பல்வேறு சாதனைகளின் புள்ளிவிபரம்
பின்னர் 1974ல் சுனில் கவாஸ்ஸ்கர் சதம் அடித்தார்.
1982ல் சந்தீப் படீல் சதம் அடித்தார்.
1990ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதம் அடித்தது இந்த மைதானத்தில் தான்.

இந்த வரலாற்று வரிசையில் ரோகித் சர்மா நேற்று 113 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் விளாசி 140 ரன்களை எடுத்து இடபெற்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்