ஆப்நகரம்

Virat Kohli: 2008 U 19 உலகக் கோப்பையில் நடந்த நிகழ்வு, கோலி வில்லியம்சன் இடையே மீண்டும் நிகழும் அதிசயம்!

விராட் கோலி, வில்லியம்சன் 2008 U 19 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட போது நிகழ்ந்த அதே நிகழ்வு மீண்டும் நடைப்பெறுவது பெரிய அதிசயமாக பார்க்கப்படுகின்றது.

Samayam Tamil 7 Jul 2019, 3:17 pm

உலகக் கோப்பையில் ஜூலை 9ம் தேதி இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதல் அரையிறுதிப் போட்டி நடக்க உள்ளது.
Samayam Tamil Kohli WIlliamson


இந்தாண்டு நடைப்பெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியைப் போலவே, 2008ல் U 19 உலகக் கோப்பையிலும் நடைப்பெற்றது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

2008ம் ஆண்டு நடந்த U 19 உலகக் கோப்பை தொடரின் போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதி உள்ளது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தோனி தன் மகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அசத்தல் வீடியோ!

இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா மழை காரணமாக 43 ஓவராக குறைக்கப்பட்ட 191 ரன் இலக்காக வைக்கப்பட்டது.

இதில் விராட் கோலி 43 ரன் உதவியால் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பையையில் அதிக வெற்றிகளை குவித்த இந்தியா!- புள்ளிப்பட்டியலில் நம்பர் 1

இதே போல் தற்போது 2019 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்தியா, வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

கோப்பையை வென்ற இந்தியா:
2008 U 19 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா U 19 அணியை வீழ்த்தி கோலி உலகக் கோப்பையை கைப்பற்றினார்.

ரோகித் சர்மாவிடம் டியூசன் போங்க... இலங்கை வீரர்களை விளாசிய கேப்டன் கருணரத்னே

தற்போது 2019 உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதிலும் சிறப்பாக செயல்பட்டு 3வது முறையாக இந்தியா உலகக் கோபையை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்