ஆப்நகரம்

IND vs NZ World Cup: ஜாம்பவான் சச்சின் உலக சாதனையை உடைப்பாரா ‘டான்’ ரோகித்!

மான்செஸ்டர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய வீரர் ரோகித் சர்மா, ஜாம்பவான் சச்சின் சாதனையை தகர்ப்பார் என தெரிகிறது.

Samayam Tamil 9 Jul 2019, 12:54 pm
இங்கிலாந்தில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
Samayam Tamil Rohit Sharma


இந்நிலையில் இன்று மான்செஸ்டரில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பிடித்த இந்தியஅணி, நான்காவது இடம்பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

ரோகித் உலக சாதனை:
இதில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, ஜாம்பவான் சச்சினின் உலக சாதனையை தகர்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 27 ரன்கள் எடுத்தால், ஒரே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற ஜாம்பவான் சச்சினின் (673 ரன்கள்) என்ற புது உலக சாதனை படைப்பார்.

இவர் 13 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் (659 ரன்கள்) சாதனையை தகர்ப்பார்.

7 சதங்கள்:
தவிர, இப்போட்டியில் ரோகித் சர்மா,1 சதம் அடிக்கும் பட்சத்தில், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சின் (6 சதங்கள்) மற்றொரு சாதனையை தகர்பார்.


4 சதங்கள்:
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ரோகித் சர்மா சதம் விளாசும் பட்சத்தில் உலகக்கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக அதிக சதமடித்த வீரர் என்ற இலங்கையின் சங்ககராவின் சாதனையை சமன் செய்வார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்