ஆப்நகரம்

நீங்க எங்க ஏரியாக்கு வாங்கடா.. வச்சு செய்யுறோம்...: 2023க்காக இந்தியா மரண வெயிட்டிங்!

மும்பை: அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடக்கவுள்ளதால், இங்கிலாந்து அணி தங்களின் கோப்பையை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Jul 2019, 3:29 pm
இங்கிலாந்தில் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் இந்தியா (2011), ஆஸ்திரேலியா (2015) அணிகளை தொடர்ந்து இங்கிலாந்து (2019) அணி சொந்த மண்ணில் கோப்பை வென்று சாதித்தது.
Samayam Tamil Cricket World Cup 2023


இந்தியாவில்....
இந்நிலையில் அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனால், இங்கிலாந்து அணி தங்களின் கோப்பையை தக்கவைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

தற்போதைய உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு சொந்தமண் பலம் சாதகமாக செயல்பட்டாலும், ஆசிய அணிகளான பாகிஸ்தான், வங்கதேச அணிகளிடம் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டதை கண்கூடாக காணமுடிந்தது.

முதல் முறை:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இதற்கு முன்பாக மூன்று முறை நடந்துள்ளது. அதில் கடந்த 1987ல், பாகிஸ்தான் உடனும், 1996ல் இலக்கை, பாகிஸ்தான் உடனும், 2011ல் இலங்கை, வங்கதேச நாடுகள் உடனும் இணைந்து இந்தியா உலகக்கோப்பை தொடரை நடத்தியது.


ஆனால், வரும் 2023ல் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக்கோப்பை தொடரை நடத்தவுள்ளதால், இம்முறை வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி அடுத்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என தெரிகிறது. 2023ல் உலகக்கோப்பை தொடரின் ஃபைனல் மும்பையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டு காத்திருப்பு:
ஆனால் கைக்கு அருகில் கிடைத்த வாய்ப்பை இந்திய அணி வீரர்கள் தற்போது கோட்டைவிட்டதால், தற்போது 4 ஆண்டுகல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் சீனியர் தோனி, பெரும்பாலும் இந்திய அணியில் இடம்பெறமாட்டார் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்