ஆப்நகரம்

உலகக் கோப்பையையில் அதிக வெற்றிகளை குவித்த இந்தியா!- புள்ளிப்பட்டியலில் நம்பர் 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அதிக புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Samayam Tamil 7 Jul 2019, 1:09 pm
உலகக் கோப்பை தொடரில் தொடக்கம் முதல் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணிக்காக ரோகித் சர்மா 5 சதங்கள் விளாசி மிகப்பெரிய பலமாக உள்ளார்.
Samayam Tamil Team India Points Table


நம்பர் 1 இடத்தில் இந்தியா:
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி, நியூசிலாந்துடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இத காரணமாக இந்தியா மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

தொடர்ந்து ஆஸ்திரேலியா 14 புள்ளிகள், இங்கிலாந்து 12 புள்ளிகள், நியூசிலாந்து 11 புள்ளிகள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பாகிஸ்தான். இலங்கை, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறி உள்ளன.

அரையிறுதி:
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா, 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வரும் ஜூலை 9ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

அதே போல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 3வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை வரும் ஜூலை 14ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்