ஆப்நகரம்

இன்னைக்கும் போச்சு... மழையால் இந்தியா, நியூசி., போட்டி ரத்து!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதயிருந்த உலக கோப்பை தொடரின் 18வது போட்டி மழை காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

Samayam Tamil 13 Jun 2019, 8:37 pm

ஹைலைட்ஸ்:

  • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Trent Bridge 1
நாட்டிங்காம்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதயிருந்த உலக கோப்பை தொடரின் 18வது போட்டி மழை காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜூலை 14 நடக்கும் இத்தொடரில், 45 லீக் போட்டி, 3 நாக் - அவுட் என 48 போட்டிகள் நடக்கிறது. நாடிங்ஹாமில் நடக்கயிருந்த உலகக்கோப்பை தொடரின் 18வது போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதயிருந்தன.

இன்னைக்கு போட்டி ரத்தானால் இந்தியாவுக்கு தான் அதிக தலைவலி!



மோசமான வானிலை:

போட்டி நடக்கும் நாடிங்ஹாமில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. இன்றும் எதிர்பார்த்தது போல கனமழை பெய்தது. இதையடுத்து ‘டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. விட்டு விட்டு மழை நீடிப்பதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்திய விவசாயிகளுக்காக வருண பகவானிடம் வேண்டிக்கொண்ட கேதர் ஜாதவ்!



இதுக்கு பேசாம நீச்சல் போட்டி வைங்கடா...: ஐசிசி.,யை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!

அடுத்து என்ன?
மழை முழுமையாக நின்றபின் அம்பயர்கள் மைதானத்தை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து விட்டு விட்டு பெய்து மழை ஒளிந்து பிடித்து விளையாடியதால், இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்