ஆப்நகரம்

Head to Head: இந்த முறையும் இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு... வீரர்கள் ஒப்பீடு இதோ!

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியைப் போல பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தியா - பாகிஸ்தான் போட்டி. இதில் இரு அணி வீரர்களின் ஒப்பீடு இங்கு பார்ப்போம்.

Samayam Tamil 16 Jun 2019, 3:07 pm

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பிரச்னை பல காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனால் இருநாடுகளை சேர்ந்த மக்கள் போட்டியை வியந்து அல்லது வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடுவது இயல்பு தான்.
Samayam Tamil INDvPAK


ஆனால் பொதுவாகவே இந்தியா விளையாடும் போட்டிகள் சுவாரஸ்யமாகவும், அதிக ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதை விட இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டியை காண இருநாட்டு ரசிகர்களை தாண்டி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்று பார்க்கும் போட்டியாக பார்க்கப்படுகிறது.

ஒரு முறை கூட வெற்றி பெறாத பாகிஸ்தான்:
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை வரலாற்றில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 6 முறையும் இந்தியா வென்று ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
இந்த முறையும் பலம் வாய்ந்த உலகக் கோப்பை வெல்லும் என பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்திய அணி தான் வெல்லும் என நம்பப்படுகிறது.

விரர்கள் ஒப்பீடு:
இந்திய அணியில் விராட் கோலியைப் போல, பாகிஸ்தான் அணியால் நம்பப்படுவது பாபர் அஜாம்.

இந்தியாவின் தவான் - ரோகித் போலம் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக், ஃபகர் ஜமன் சிறப்பான துவக்கத்தை கொடுத்து வருகின்றனர்.

பும்ரா - அமீர்:
இந்தியாவில் யாக்கர் மன்னன் பும்ரா விக்கெட் எடுப்பதிலும், ரன் கட்டுப்படுத்துவதில் அசத்தி வருகின்றார். அதே போல் பாகிஸ்தானின் முகமது அமீர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அமிர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி 30 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார்.
மற்றொரு பவுலர் புவனேஸ்வர்குமார் மிரட்டி வருகின்றார்.

மேலும் ஒரு சாதனை படைக்குமா இந்தியா?: டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு

சுழல் பலம்:
இந்தியாவுக்கு சஹால்,குல்தீப் யாதவ் என இரு சுழல் வீரர்கள் பலமாக விளங்குகின்றனர். ஆனால் பாகிஸ்தானில் சொல்லிக்கொள்ளும் படியாக எந்த சுழல்பந்து வீரர்களும் இல்லை.

ஆல்ரவுட்ண்ர்:
இந்தியாவின் ஹர்திக் பாண்டியா உலகமே வியக்கும் ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ஹசன் அலி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

தோனி பலம்:
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியை, பாகிஸ்தான் கேப்டன் & விக்கெட் கீப்பர் சர்ஃப்ரஸ் அகமது மட்டுமல்லாமல் உலகத்தின் எந்த கீப்பராலும் ஈடுகட்ட முடியாத அளவிற்கு சிறந்த வீரராக உள்ளார்.

சமிக்கு வாய்ப்பு:
மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், போட்டி ஓவர் குறைக்கப்படும்பட்சத்தில் இந்தியாவில் கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதே சமயம் ஸ்பின் பவுலிங்கு சாதகமாக மைதானம் இருப்பதால், மழை பெய்யாவிட்டால் அதே அணியுடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India Probable XI: Rohit Sharma, KL Rahul, Virat Kohli, Vijay Shankar, MS Dhoni, Kedar Jadhav, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Jasprit Bumrah

Pakistan Probable XI: Imam ul Haq, Fakhar Zaman, Babar Azam, Mohammad Hafeez, Sarfraz Ahmed, Shoaib Malik, Asif Ali, Hasan Ali, Wahab Riaz, Shadab Khan, Mohammad Amir

அடுத்த செய்தி

டிரெண்டிங்