ஆப்நகரம்

World Cup 2019 Final: இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை...: அடிச்சு சொல்லும் அக்தர்!

லண்டன்: இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jul 2019, 11:21 am
இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
Samayam Tamil Team India


யார்? யார்?
இதில் நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடம் பிடித்த இந்திய அணி, நான்காவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

பின் வரும் 11ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ஒரே ஆசிய அணி:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே ஆசிய அணி இந்திய அணி தான். இதற்கிடையில் இந்திய அணி தான் கண்டிப்பாக கோப்பை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அக்தர் கூறுகையில், ‘நியூசிலாந்து அணியால் நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க முடியாது. நியூசிலாந்து அணியை ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணியே சிறப்பாக விளையாடியது. ஆனால் ரன் ரேட் மிகப்பெரிய பங்கு வகித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் இருக்கும் பார்மை பார்த்தால், இம்முறை இந்திய அணியே நிச்சயமாக கோப்பை வெல்லும்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்