ஆப்நகரம்

IND vs NZ: 14ம் தேதி ‘உலகக்கோப்பை’ என் கையில இருக்கும்: ‘கும்பூ’ பாண்டியா!

உலக கோப்பையை வெல்ல மூன்று ஆண்டுகளாக தீவிரமாக தயாராகி வருவதாக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Jun 2019, 12:14 pm

ஹைலைட்ஸ்:

  • இந்திய அணிக்காக விளையாடுவது தான் என் வாழ்வே. விளையாட்டை அதிகம் நேசித்து விளையாடும் நபர் நான். எனக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Hardik Pandya
நாட்டிங்காம்: உலக கோப்பையை வெல்ல மூன்று ஆண்டுகளாக தீவிரமாக தயாராகி வருவதாக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.

World cup 2019, Nottingham: நியூசி.,யை நசுக்கி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா....!

வெற்றித்துவக்கம்:
இந்நிலையில் நாடிங்ஹாமில் நடக்கும் உலகக்கோப்பை தொடரின் 18வது போட்டியில் இத்தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

அலறவச்ச வஹாப்...: கைகொடுத்த கம்மின்ஸ்...: ஆஸி., ‘த்ரில்’ வெற்றி!

மழை அச்சுறுத்தல்:
அதே நேரம், நாடிங்ஹாம் வானிலை மிகவும் மோசமாக உள்ளதால், போட்டி ரத்தாகும் அல்லது பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் சாதிப்பதற்காகவே கடந்த 2, 3 ஆண்டுகளாக தீவிரமாக தயாரானதாக இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
வாழ்வே இதுதான்:
இதுகுறித்து பாண்டியா கூறுகையில், ‘இந்திய அணிக்காக விளையாடுவது தான் என் வாழ்வே. விளையாட்டை அதிகம் நேசித்து விளையாடும் நபர் நான். எனக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும். உலகக்கோப்பை தொடருக்காக கடந்த 2,3 ஆண்டுகளாகவே தீவிரமாக தயாரானேன்.
சரியான நேரம்:
தற்போது சாதித்து காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் ஜூலை 14ம் தேதி உலகக்கோப்பை என் கையில் கண்டிப்பாக இருக்கும். என திட்டம் ரொம்ப சிம்பிள், உலகக்கோப்பை வெல்வது மட்டுமே. 100 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் அது தான் என்பதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்