ஆப்நகரம்

Ravi Shastri: தோனி எதற்கு 7வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார்? - தோல்வி குறித்து ரவி சாஸ்திரி விளக்கம்

உலகக் கோப்பையில் இந்தியா தோல்விக்கு தோனி 7வதாக களமிறக்கப்பட்டது தான் காரணமா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 13 Jul 2019, 1:26 pm
இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
Samayam Tamil Ravi Shastri


உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரி 239 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக மறுநாள் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியா பேட்டிங் செய்த போது 5/3 விக்கெட்டும், 24/4 விக்கெட்டும் சரிந்து தத்தளித்தது. இருப்பினும் அடுத்தடுத்து கார்த்திக், பண்ட், பாண்டியா என களமிறக்கப்பட்டனர். தோனி 7வதாக களமிறக்கப்பட்டார்.

இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு தோனியை 7வது பேட்ஸ்மேனாக களமிறங்க்கியது தான் காரணம். அவரை முன்கூட்டியே இறக்கிருக்க வேண்டும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார்.

ரவி சாஸ்திரி பேசுயதாவது:
தோனி இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபினிஷர் என அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அவரை போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு 7வது பேட்ஸ்மேனாக களமிறக்கினோம்.

தோனியை ஒரு வேளை முன்னதாகவே களமிறக்கி அவரும் விக்கெட்டை பறிகொடுத்திருந்தால் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்திருக்கும். ஜடேஜா உடன் சிறப்பாக தோனி ஆடி இந்தியா சேஸிங் செய்ய மிக கடுமை ஆகி இருக்கும்.

ஜடேஜா (77), தோனி (50) என எடுத்து மொத்தம் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் வலுப்படுத்தினர். இருப்பினும் இவர்களின் முயற்சி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பறிபோனது.

அணியை பாராட்டிய சாஸ்திரி:நாம் கடைசியாக தோற்றதை எண்ணி மிகவும் துவண்டுள்ளது உண்மை தான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா எவ்வளவு சிறப்பாக ஆடி பல வெற்றிகளை குவித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்