ஆப்நகரம்

உலகை அதிர வைக்கும் அசுர வேக பவுலர் இவர் தான்: பிரட் லீ!

இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தும் வேகப்பந்துவீச்சாளர்களை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தேர்வு செய்துள்ளார்.

Samayam Tamil 23 May 2019, 6:54 pm
மெல்போர்ன்: இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தும் வேகப்பந்துவீச்சாளர்களை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தேர்வு செய்துள்ளார்.
Samayam Tamil Brett-Lee


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கு ம் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.

இரண்டு பயிற்சிப்போட்டி:
இத்தொடருக்கு முன்பாக (மே 25ம் தேதி) நியூஸிலாந்து, வங்கதேசம் (மே 28ம் தேதி) அணிகளுக்கு எதிராக இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அசத்தும் வேகப்பந்துவீச்சாளர்களை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தேர்வு செய்துள்ளார்.
அசுர வேக பவுலர்:
இதுகுறித்து பிரட் லீ கூறுகையில், ‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடப்பதால், இது பலர்களுக்கு சாதகமான விஷயம். இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இத்தொடரில் அசுர வேகத்தில் சாதிப்பார் என நினைக்கிறேன். இதற்கு அவரின் விசித்திரமான பவுலிங் முறை தான் காரணம். இவரைப்போலவே, ஆஸ்திரேலிய பவுலர்களான மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோரும் அசத்த அதிக வாய்ப்புள்ளது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்