ஆப்நகரம்

நியூசி வேகத்தில் சுருண்ட இலங்கை : தனி ஒருவன் கருணரத்னே மல்லுக்கட்டு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Samayam Tamil 1 Jun 2019, 5:40 pm
கார்டிப்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Samayam Tamil Lockie Ferguson


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.

பலமான நியூசி.,:
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில், நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
கருணரத்னே போராட்டம்:
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, திரிமண்ணே (4) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த குசல் பெரேரா (29) நிலைக்கவில்லை. பின் வந்த குசல் மெண்டிஸ் ‘டக்’ அவுட்டானார்.
திசாரா பெரேரா (27) ஓரளவு கைகொடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தனி ஆளாக போராடிய கேப்டன் கருணரத்னே (52*) அரைசதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்