ஆப்நகரம்

Rohit Sharma: ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற ரோகித் மற்றும் பும்ரா - கேப்டன் யார் தெரியுமா?

ஐசிசி உலகக் கோப்பை தொடர் இனிதே முடிந்துள்ளது. தற்போது அந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தொகுத்து அணி உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jul 2019, 1:04 pm

ஐசிசி உலகக் கோப்பை தொடர் இனிதே முடிந்தது. அதில் இங்கிலாந்து உலகக் கோப்பையை முதன் முறையாக வென்று அசத்தி உள்ளது.
Samayam Tamil Rohit Bumrah


உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை ஒரு கதம்பமாக கோர்த்து போட்டித் தொடர் அணி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த ஐசிசி சிறந்த அணியில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி அணி விபரம்:
1. ரோகித் சர்மா (இந்தியா) - 648 ரன்கள், சராசரி 81.00
2. ஜேசன் ராய் (இங்கிலாந்து) - 443 ரன்கள், சராசரி 63.28
3. கேன் வில்லியம்சன் (கேப்டன்) (நியூசிலாந்து) - 578 ரன்கள், சராசரி 82.57
4. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 556 ரன்கள், சராசரி 61.77
5. ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்) - 606 ரன்கள் சராசரி 86.57 , 11 விக்கெட்டுகள், சராசரி 36.27

இந்திய அணிக்கு இனி இரண்டு கேப்டன்கள்.. அப்போ ‘தல’ தோனிக்கு வாய்ப்பு தரலாமா?

6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 465 ரன்கள் சராசரி 66.42 , 7 விக்கெட்டுகள், சராசரி 35.14
7. அலெக்ஸ் கேரி (wk) (ஆஸ்திரேலியா) - 375 ரன்கள், சராசரி 62.50 மற்றும் 20 விக்கெட்டுகள்
8. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 27 விக்கெட்டுகள், சராசரி 18.59
9. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 20 விக்கெட்டுகள், சராசரி 23.05
10. லூக்கி பெர்குசன் (நியூசிலாந்து) - 21 விக்கெட்டுகள் சராசரி 19.47
11. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 18 விக்கெட்டுகள், சராசரி 20.61

தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ!- இனி தோனி ஆடுவது சந்தேகம்!

இந்திய அணி சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக ரோகித் சர்மாவின் 5 சதங்கள் திகழ்ந்தன. மறு முனையில் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறியதை அடுத்து ரோகித்தின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த பிசிசிஐ அவரை கேப்டனாக நீட்டிக்க முயற்சிப்பதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்