ஆப்நகரம்

ஆப்கான் அணியில் ஆஸ்கர்... தென் ஆப்ரிக்க அணி ‘பீல்டிங்’!

கார்டிப்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 21வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

Samayam Tamil 15 Jun 2019, 6:05 pm
இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜூலை 14 நடக்கும் இத்தொடரில், 45 லீக் போட்டி, 3 நாக் - அவுட் என 48 போட்டிகள் நடக்கிறது. லண்டனில் நடக்கும் உலகக்கோப்பை தொடரின் 21வது போட்டியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
Samayam Tamil SA v AFG

இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் ஆப்கான் ஆஸ்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

அணி விவரம்:
ஆப்கானிஸ்தான்: Hazratullah Zazai, Noor Ali Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi, Asghar Afghan, Gulbadin Naib(c), Mohammad Nabi, Ikram Ali khil(w), Rashid Khan, Aftab Alam, Hamid Hassan

தென் ஆப்ரிக்கா: Quinton de Kock(w), Hashim Amla, Aiden Markram, Faf du Plessis(c), Rassie van der Dussen, David Miller, Andile Phehlukwayo, Chris Morris, Kagiso Rabada, Imran Tahir, Beuran Hendricks

அடுத்த செய்தி

டிரெண்டிங்