ஆப்நகரம்

Lasith Malinga: தோனி ஓய்வு பெறுங்கள்... ஆனால் அதற்கு முன் இதை செய்யுங்கள்: தோனி குறித்து மலிங்கா ஆலோசனை

இந்திய அணியில் தோனி ஓய்வு பெறுவது குறித்து, இலங்கையின் மலிக்ங்கா முக்கிய கருத்தை கூறியுள்ளார். தோனி ஓய்வு பெறூவதற்கு முன் இதை செய்வது அவசியம் என்வும் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Jul 2019, 3:24 pm

இந்திய அணியில் முத்திரைப் பதித்த வீரர்களின் முக்கியமானவர்க தல தோனி. இவர் இந்திய அணி கேப்டனாக டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் டிரோபி என பல்வேறு ஐசிசி முக்கிய தொடர்களில் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
Samayam Tamil Dhoni Retirement


ஆமை வேகம் தோனி:
கடந்தாண்டில் தோனியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாக சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சித்தனர். தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் சிறப்பாக விளையாடினார். ஐபிஎல் தொடரிலும் அசத்தினார்.

ஆனால் தற்போது நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் மீண்டும் மிக மெதுவாக ரன் சேர்த்து வருவதோடு, பந்துகளை வீணடிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என கூறி வருகின்றனர்.

7வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி பல சாதனைகளைப் படைத்திருக்கும் இந்திய அணி

மலிங்கா கருத்து:
ஆனால் 35 வயது மலிங்கா இலங்கை அணிக்காக விளையாடுமாறு மீண்டும் அழைக்கப்பட்டவர். அதோடு உலகக் கோப்பையில் இலங்கை அணிக்காக சிறப்பாக பந்து வீசி, விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.

தோனிக்கு காயம்?- இலங்கைக்கு எதிராக விளையாடுவதில் சந்தேகம்!

தோனியின் ஓய்வு குறித்து மலிங்கா பேசும் போது, “ இன்றளவும் உலக கிரிக்கெட்டில் தோனியைப் போன்ற சிறந்த ஃபினிஷரைப் பார்த்ததில்லை. அவர் கண்டிப்பாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாவது விளையாட வேண்டும்.

ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டு கால சாதனையை தகர்த்த ஆப்கானின் இக்ராம்!

தோனி ஓய்வு பெறுவதற்கு முன்னர் மிகச் சிறந்த அணியை உருவாக்க வேண்டும். அவரைப் போன்ற சிறந்த விக்கெட் கீப்பரையும் அடையாளம் கண்டு, அவருக்கு தன் முழு நுட்பத்தையும் கற்று கொடுக்க வேண்டும். அவர் இன்றும் இளமையானவர் தான். அவர் ஓய்வு பெறுவது குறித்து எண்ணம் கொள்ள தேவையில்லை.” என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உலகக் கோப்பை:
என்னைப் பொறுத்த வரையில் இந்தியா உலகக் கோப்பை வெல்ல அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அணியில் பல அனுபவ வீரர்கள் உள்ளனர். ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்தோம். அதே போல் கோலியும் சிறப்பாக ஆடி வருகின்றார். அவர் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் சதம் அடிக்க வாய்ப்புள்ளது. என கூறியுள்ளார்.

மலிங்காவின் பேச்சு தோனி ரசிகர்களிடம் பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளதோடு, தோனியை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது. விராட் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் தோனி சிறந்த இந்திய அணிக்கு முதுகெலும்பாக உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்