ஆப்நகரம்

Dhawan Injured : சதம் அடித்து அசத்திய ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து நீக்கம்?

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2019, 5:02 pm
இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்கிறது.

இந்தியா இதுவரை தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஷிகர் தவான் நீக்கம்?
கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் சதம் (117) அடித்து அசத்தினார். அந்த போட்டியில் ஷிகர் தவான் குல்டர் நைல் பந்தில் இடது கை பெருவிரலில் காயமடைந்தார்.

இந்நிலையில் அவர் அந்த போட்டியின் போது பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து மருத்துவ சோதனை செய்தனர்.

ஷிகர் தவான் காயம் குறித்து மருத்துவக் குழு கூறும் போது, “அவரின் கை விரலில் முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அவரின் காயம் ஆறுவதற்கு சற்று காலம் எடுக்கும். அவர் குறைந்தபட்சம் 3 வாரங்கள் ஓய்வு எடுப்பது நல்லது. ” என மருத்துவக்குழு பிசிசிஐ.,யிடம் அறிவுறுத்தியுள்ளது.



காயம் ஆறும் பட்சத்தில் நாக் அவுட் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு?ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்