ஆப்நகரம்

அடடடா... இவ்வளவு நாளா எங்கடா இருந்த... நீ எல்லாம் இருக்கும் போது என்ன யாராலடா தொட முடியும்....?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி தான் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Jul 2019, 4:36 pm
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர் கடந்த 2015ல் இந்திய அணியின் நிர்வாகியாக இருந்தார். அப்போதே இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் ஒத்துப்போனது.
Samayam Tamil Ravi Shastri - Virat Kohli


கும்ளே ‘பை-பை’:
அதன் பின் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே பொறுப்பேற்றார். ஆனால் ரவி சாஸ்திரி அளவுக்கு கோலிக்கும் கும்ளேவுக்கும் ஒத்துப்போகவில்லை.

படுமோசம்:
இதன் விளைவாக கடந்த 2017ல் மினி உலகக்கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைக்க இந்திய அணி தவறியது. தொடர்ந்து கும்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.

இரண்டு உலகக்கோப்பை:
தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோலி, ரவி சாஸ்திரி கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2020) 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், 2021ல் டி-20 உலகக்கோப்பை என இரு உலகக்கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளது. அதனால் இந்திய அணி, தற்போது இந்த இரு உலகக்கோப்பைகளை குறிவைத்துள்ளது.

மகிழ்ச்சி:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால், மகிழ்ச்சி தான் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வ்ராட் கோலி தெரிவித்துள்ளார்.


இத்குறித்து கோலி கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால், மகிழ்ச்சி தான். இருந்தாலும், பயிற்சியாளர் தேர்வு முடிவு என்பது கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் முடிவு.

உலகக்கோப்பை போன்ற தொடருக்கு பின் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப், மற்றும் டி-20 உலகக்கோப்பைகளை வெல்வதே இலக்கு,’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்