ஆப்நகரம்

CSK vs RCB: எப்படி வென்றது சிஎஸ்கே? RCB செய்த மூன்று முக்கியத் தவறுகள்

18.4 ஓவர்களில் இலக்கை அடைந்து சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே.

Samayam Tamil 26 Oct 2020, 7:57 am
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி, டிவிலியர்ஸ் கடைசி வரை களத்தில் இருந்தும் பெரிய ஷாட்களை ஆட முடியாமல் திணறினர். இதனால், பெங்களூர் அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Samayam Tamil mistakes of rcb team in yesterday match against csk
CSK vs RCB: எப்படி வென்றது சிஎஸ்கே? RCB செய்த மூன்று முக்கியத் தவறுகள்


146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் (65), அம்பத்தி ராயுடு (39) சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18.4 ஓவர்களில் இலக்கை அடைந்து சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

பெங்களூர் அணி எதிர்வரும் மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்றாலே போதும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற வேண்டுமென்றால் தவறுகளை திருத்திக்கொண்டு, கடுமையாகப் போராடி எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் செய்த மூன்று முக்கியத் தவறுகளை பற்றி தற்போது பார்ப்போம்.

பெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்த ‘தல’ தோனி!

​மிடில் ஓவர்களில் சஹலுக்கு வாய்ப்பு தராதது:

கடந்த 3-4 வருடங்களில் பெங்களூர் அணிக்கு அதிக விக்கெட்களை எடுத்துக் கொடுத்த வீரராக யுஷ்வேந்திர சஹல் திகழ்கிறார். ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு இருவரும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைத்த நேரத்தில் 9 முதல் 12 ஓவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சஹலுக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை. இந்த நேரங்களில் சஹலை பயன்படுத்தியிருந்தால் ஒரு விக்கெட்டையாவது எடுத்துக் கொடுத்து அசத்தியிருப்பார்.

​முகமது சிராஜை துவக்கத்தில் பயன்படுத்தாதது:

முகமது சிராஜ் கடந்த போட்டியில் பவர் பிளேவில் சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். இப்போட்டியில் சிராஜ் ஓபனிங் ஓவர் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவர் பிளேவில் கிறிஸ் மோரிஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மாறிமாறி பந்துவீசினர் வீசினர். சிராஜை முதல் மூன்று ஓவர்கள் வரை விராட் கோலி அழைக்கவில்லை. இவர் ஓபனிங் ஓவர் வீசியிருந்தால், சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.

​கடைசி நேரத்தில் அதிரடி காட்ட நினைத்தது:

விராட் கோலி, டி விலியர்ஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து வழக்கத்துக்கு மாறாக நிதானமாக விளையாடினர். ரன்கள் ஓடி எடுக்க ஆர்வம் காட்டி பெரிய ஷாட்களை ஆட மறுத்தனர். டெத் ஓவர்களில் அதிரடி காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்த அவர்களுக்கு, சென்னை அணி பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீச நெருக்கடி கொடுத்தனர். இதனால், கடைசி மூன்று ஓவர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே பறந்தது கோலி, டி விலியர்ஸ் இருவரும் துவக்கம் முதலே அடித்து விளையாடியிருந்தால், பெங்களூர் அணி பக்கம் வெற்றி வாய்ப்பு நகர்ந்திருக்குமெனக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்