ஆப்நகரம்

என்ன செய்யப்போகிறது சென்னை அணி. அசத்துவார்களா இரண்டு ஃபாரின் ஸ்டார்ஸ்?

சென்னை - மும்பை இரு அணிகளும் விளையாடவுள்ள ஐபிஎல் முதல் தொடர் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சரியாக 7 . 30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Samayam Tamil 19 Sep 2020, 7:12 pm
சென்னை அணியில் உள்ள சாதகம் மற்றும் பாதகமான சில அலசல்களை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Samayam Tamil quick preview on chennai super kings team batting and bowling before the match
என்ன செய்யப்போகிறது சென்னை அணி. அசத்துவார்களா இரண்டு ஃபாரின் ஸ்டார்ஸ்?


சென்னை அணி

ஷேன் வாட்சன், ஃபாப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சகார், ஷார்துல் தாக்கூர்

ஷேன் வாட்சன் மற்றும் டு பிளெசிஸ்

சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியுள்ள நிலையில், ஷேன் வாட்சன் மற்றும் டு பிளெசிஸ் இருவரும் தங்களது அனுபவத்தின் படி சிறப்பாக செயல்படவேண்டியுள்ளது. மேலும், ரெய்னா இல்லாத குறையை இந்த இரண்டு வீரர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் சென்னை அணி ரசிகர்கள் எதிர்பாப்பார்கள்.

டெத் ஓவர்

மும்பை அணியில் அதிக ஆல் ரவுண்டர்கள் இருப்பதால், டெத் ஓவருக்கு முன்னரே பவுலர்கள் குறிப்பிட்ட விக்கெட்டுகளை எடுக்கவேண்டியது அவசியமானதாகும். இல்லையென்றால் டெத் ஓவர்களில் சென்னை அணி பவுலர்கள் நெருக்கடியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

தீபக் சகார்

கடந்த இரண்டு சீசன்களில், சிஎஸ்கேயின் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை (90) எடுத்துள்ளனர். சென்னையில் அணியில் ஹர்பஜன் இல்லையென்றாலும் போதுமான ஸ்பின் பவுலர்களை வைத்திருக்கிறார் தோனி. அதுபோல், கடந்த இரண்டு சீசனில் மிடில் ஆட்டத்தில் ஸ்பின் ஓவர்களுக்கு முன்பே பவர்பிளேவில் தீபக் சகார் 25 விக்கெட்டுகளை எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா

கடந்த சீசனில் சென்னை அணியில் முதல் 10 ஓவர்களில் பெரிய அளவிற்கு ரன் குவிக்கப்படவில்லை. மெதுவான அணுகுமுறை சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக டாப் வரிசையில் இடது கை வீரர் சுரேஷ் ரெய்னா இல்லாதது மும்பை பவுலர்களுக்கு பெரிய அளவில் தலைவலியை ஏற்படுத்தாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்