ஆப்நகரம்

ஜடேஜா கடைசி ஓவரை வீசியதற்குக் காரணம் இதுதான்: தோனி விளக்கம்!

டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி ஓவரில் 17 எடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தபோது, ரவீந்திர ஜடேஜாவுக்கு 20ஆவது ஓவரை வழங்கி ஆச்சரியமளித்த மகேந்தரசிங் தோனி, இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 18 Oct 2020, 8:49 am
ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசன் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சாம் கரன் அபாரமாகப் பந்துவீசினார். அனைத்து பந்துகளையும் ஒயிட் யார்க்கராக வீசி அலெக்ஸ் கேரியை வெளியேற்றி, 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், டெல்லி அணி கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்தது.
Samayam Tamil MS Dhoni


டுவைன் பிராவோ பந்துவீச வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவிந்திர ஜடேஜா பந்தை கையில் எடுத்து, அக்‌ஷர் படேலை மூன்று சிக்ஸர்கள் அடிக்கவிட்டார். இதனால், 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. ஜடேஜாவுக்கு 20ஆவது ஓவரை வீசும் வாய்ப்பை தோனி ஏன் கொடுத்தார் எனப் பலர் குழம்பிக்கொண்டிருக்கும் நிலையில் ’கூல் கேப்டன்’ இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

“பிராவோ சில உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டதால், அவரால் பந்துவீச இயலாத நிலை இருந்தது. அதனால் ஜடேஜா, கரண் ஷர்மா இருவரில் ஒருவரைப் பயன்படுத்த முடிவு செய்தேன். ஜடேஜா எனது தேர்வாக இருந்தார்” என தோனி கூறினார். ஷிகர் தவன் அடித்த கேட்ச்கள் இரண்டுமுறை தவறவிடப்பட்டது.

கேட்ச்களை தவறவிட்ட சென்னை அணிக்குப் பரிசாக கிடைத்த தோல்வி!

இதனால், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை தவன் பதிவு செய்தார். இதுகுறித்தும் தோனி பேசினார். “ஷிகரின் விக்கெட் மிக முக்கியமானதாக இருந்தது. இருப்பினும், அவர் அடித்த சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம்.

அவரை விரைவில் வீழ்த்தாத காரணத்தினால், அதிரடியாக விளையாடி எங்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தார்” எனக் கூறினார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் 58 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 101 ரன்கள் குவித்து, 180 ரன்கள் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்