ஆப்நகரம்

IPL 2021: 19 கோடியை தூக்கியெறிந்த வீரர், ஏலத்தில் இவர்களுக்கு மட்டும்தான் இடம்!

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2021, 8:00 am
ஐபில் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடபெறும் என பிசிசிஐ அறிவித்த நிலையில், இதில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், கேரளா வீரர் ஸ்ரீசாந்த் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பல முக்கிய வீரர்கள் ஏலத்தைப் புறக்கணித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil sreesanth


சச்சின் டெண்டுல்ர்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவுள்ளார். இவருக்கான ஆரம்ப விலை 20 லட்சம். மொத்தம் 814 இந்திய வீரர்கள், 56 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள், 42 ஆஸ்திரேலிய வீரர்கள், 38 தென்னாப்பிரிக்க வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கும் ஏலத்தில் 19 கோடி வரை ஏலம் போவார் எனக் கருதப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இம்முறையும் ஏலத்தைப் புறக்கணித்துள்ளார். இதற்குமுன் 2015ஆம் ஆண்டில்தான் ஸ்டார்க் ஐபிஎலில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூட்டு தலையாக மாறிய ரூட்: இந்தியா தடுமாற்றம்!
தற்போது நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் சதமடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், சக வீரர்கள் டாம் பென்டன், ஹாரி கர்னி ஆகியோரும் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. முப்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ரிச்சர்ட்சனும் புறக்கணித்துள்ளார்.

சூதாட்டப் புகார் காரணமாக கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடைபெற்று, தண்டனையை நிறைவு செய்துள்ள வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தனது விலையை 2 கோடியாக நிர்ணயித்துள்ளார். அதேபோல், கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைபெற்று, பின் தண்டனை குறைப்பு மூலம் மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு திரும்பியுள்ள இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த், தனது விலையை 75 லட்சமாக நிர்ணயித்துள்ளார். இருவரும் ஏலம் போக அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ரூட் ஆட்டம் ஆரம்பம்... கெத்து காட்டும் இங்கிலாந்து!
ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், மார்க் உட், லியம் ப்ளங்கட், கோலின் இங்கிராம் போன்றவர்களும் தங்களின் அடிப்படை விலையை 2 கோடியாக நிர்ணயித்துள்ளனர்.

இந்திய டெஸ்ட் வீரர்கள் ஹனுமா விஹாரி (1 கோடி), சேத்தேஸ்வர் புஜாரா (50 லட்சம்), போன்றவர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்