ஆப்நகரம்

IPL 2022: ‘அகமதாபாத் அணி’…இந்த 3 பேரைத்தான் தக்க வச்சிருக்காம்: கேப்டனுக்கு சம்பளம் குறைவு?

அகமதாபாத் அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2022, 11:53 am
ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
Samayam Tamil ஐபிஎல்


இந்த புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. சஞ்சீவ் கோயங்கா குழுமம் 7,090 கோடிக்கு லக்னோ அணியையும், சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன. அதானி போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள்தான் அணிகளை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிய நிறுவனங்கள் அணிகளை வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வீரர்கள் தக்கவைப்பு:

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்கவைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்கவைத்துவிட்டன.

புதிய அணிகளும்:

இதனைத் தொடர்ந்து புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் அணிகள், இரண்டு உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளி நாட்டு வீரரையும் தக்கவைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வேலைகளில் இரண்டு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அணிகளும் யார் யாரை டார்கெட் செய்துள்ள என்ற தகவலும் அவ்வபோது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது.

குறிப்பாக அகமதாபாத் அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த முழு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும், டேவிட் வார்னர், ஹார்திக் பாண்டியா ஆகியோரும் தக்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பளம் பிரச்சினை இல்லை?

ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடியபோது காயத்தை எதிர்கொண்டு ஐபிஎலில் பங்கேற்க முடியாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு புதுக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ஷ்ரேயஸுக்கு மீண்டும் கேப்டன் பதவியை தர அணி நிர்வாகம் தயாராக இல்லை. இதனால்தான், அந்த அணியினரை தக்கவைக்க வேண்டாம் எனத் தெரிவித்துவிட்டார். மேலும், தன்னை கேப்டனாக நியமிக்கும் அணிக்கு சம்பள பேரம் பேசமால் செல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்தாராம். இதனால்தான், அகமதாபாத் அணி அவரை கேப்டனாக நியமிக்க முன் வந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்