ஆப்நகரம்

RIP: ‘ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்’…ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் திடீர் மரணம்: எப்படி தெரியுமா?

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காலமானார்.

Samayam Tamil 15 May 2022, 6:08 am
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்களுக்கு முன்பு, மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
Samayam Tamil ஆண்ட்ரு சைமண்ட்ஸ்


இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். சரியாக இரவு 10:30 மணியளவில் அவர் கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திலேயே பலி!

காரில் அவர் மட்டுமே பயணித்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளானபோது, அருகில் இருந்த பொதுமக்கள் உடனே உதவி செய்ய சென்றுள்ளனர். ஆனால், சைமண்ட்ஸ் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சைமண்ட்ஸ் 1999-2009 வரை உலக அளவில் முக்கிய ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வந்தார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இவருக்கு இணை இவர்தான்.

சைமண்ட்ஸ் ரெக்கார்ட்:


1998 முதல் 2009ஆம் ஆண்டுவரை 198 ஒருநாள் போட்டிகளில் 5088 ரன்களும் 133 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் 1462 ரன்களும், 24 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 14 டி20 போட்டிகளில் 337 ரன்களும், 8 விக்கெட்களையும் எடுத்துள்ளார். ஐபிஎலில் டெக்கான் ஜார்ஜஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு வர்ணனை பணியை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்