ஆப்நகரம்

தோனி வீட்டுக்கு போலீஸ் காவல்: கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் அறிவிப்பு!

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது பல்வேறு விமர்சனங்களும், மிரட்டல்களும் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Oct 2020, 6:49 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், அவ்வணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக கடும் விமர்சனங்களும், மகளுக்கு பாலியல் மிரட்டல் போன்ற எச்சரிக்கைகள் தொடர்ந்ததால், ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு போலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
Samayam Tamil ms dhoni


இதுகுறித்து ராஞ்சி காவல் துறை உயர் அதிகாரி நவ்ஷத் அலம் கூறுகையில். தோனிக்கு சமூக வலைத்தளங்களில் தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதால், ஹர்மு பகுதியில் உள்ள தோனியின் பழைய வீடு மற்றும் சிமலியவில் உள்ள பண்ணை வீடு போன்ற இடங்களில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். “மொத்தம் 10 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்ச்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்” எனக் கூறினார்.

தோனியின் வீடு அமைந்திருக்கும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் யாராவது சுற்றித் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டுக் காவல் நிலையில் அழைத்துச் செல்வார்கள் என நவ்ஷத் அலம் தெரிவித்தார்.

பிளே ஆஃபில் சென்னை? அதிசயம், அற்புதம் நடக்குமா? கணக்குகள் சொல்வது என்ன?

தோனிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது முன்னாள் பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யா கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். “வெற்றி, தோல்விகள் கலந்ததுதான் விளையாட்டு. எப்போதும் ஒருவர் ஜெயித்துக்கொண்டே இருக்கமுடியாது. சில நேரங்களில் தோல்விகளை சந்திக்கும் சூழல் இருக்கும். அதற்காக, வீரர்களின் விளையாட்டு திறனை விமர்சிக்கலாம். ஆனால், வீரர்களின் குடும்பத்தார், குழந்தைகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.

“தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்யக்கோரி, விரைவில் கண்டன பேரணி நடைபெறும். அதில், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தார்.

ஜார்கண்ட் கிரிக்கெட் கூட்டமைப்பும் கடும் கண்டங்களைப் பதிவு செய்துள்ளது. ''தோனி குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது கவலையளிக்கிறது. மகளுக்கு பாலியல் மிரட்டல் தெரிவித்தவரை உடனே கைது செய்ய வேண்டும் '' எனக் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்