ஆப்நகரம்

SRH vs RCB: கெத்து காட்டிய ஹைதராபாத் பௌலர்கள்...பெங்களூர் அணி படுதோல்வி!

ஐபிஎல் 13ஆவது சீசனின் 52ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 120 ரன்களும், ஹைதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 121 ரன்களும் எடுத்தது.

Samayam Tamil 31 Oct 2020, 11:38 pm
ஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஹைதராபாத் அணி பௌலர்களை எதிர்கொள்ளத் திணறியது.
Samayam Tamil ஐபிஎல் கிரிக்கெட்
ஐபிஎல் -ஹைதராபாத்


தேவ்தத் பட்டிக்கல் 5 ரன்களும், விராட் கோலி 7 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்துக் களமிறங்கிய ஏபி டிவிலியர்ஸ், ஜோஸ் பிலீப்புடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர்.

டிவிலியர்ஸ் 24 ரன்களும், பிலீப் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 21 ரன்கள் சேர்த்தார்.

RCB vs SRH IPL Match Highlights: மேட்ச்சை ஈசியா முடித்த ஹோல்டர்... ஹைதராபாத் அசால்ட் வெற்றி!

மற்றவர்கள் சிறப்பாக சோபிக்கத் தவறியதால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவுவில் 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் சந்தீப் ஷர்மா, ஜேச்ன் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடினாலும் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து அதிர்ச்சியளித்தது. ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 8 மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

MI vs DC: படுமோசமாக சொதப்பிய டெல்லி...மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி!

அடுத்துக் களமிறங்கிய மனிஷ் பாண்டே, விருத்திமான் சஹாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். சஹா 39 ரன்களும், மனிஷ் பாண்டே 26 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர்.

கடைசி நேரத்தில் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதனால், ஹைதராபாத் அணி 14.1ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்