ஆப்நகரம்

ஐபிஎல் எதிர்ப்பு சரியா? கருத்துக்கணிப்பு முடிவுகள்

சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டது சரியா என்பது குறித்து சமயம் தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்.

Samayam Tamil 12 Apr 2018, 8:52 pm
சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டது சரியா என்பது குறித்து சமயம் தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்.
Samayam Tamil ms-dhoni-csk-team-1523449256


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பல்வேறு அமைப்புகள் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியைத் தடுக்க சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவுசெய்த ஐபிஎல் நிர்வாகம், இனிமேல் சென்னையில் நடப்பதாக இருந்த போட்டிகள் புனேயில் நடக்கும் என்று அறிவித்துவிட்டது.

இந்த இடமாற்றம் குறித்து சமயம் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து ஐபிஎல் போட்டியை மற்ற மாநிலங்களுக்கு மாற்ற வேண்டுமா? என்ற கேள்விக்கு 674 பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர். 102 பேர் மட்டுமே இல்லை என்று பதில் கூறியுள்ளனர்.
பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராகவே இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இருக்கும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஐபிஎல் போட்டியை எதிர்ப்பவர்கள் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இதானல், பிசிசிஐ எடுத்திருக்கும் இடமாற்ற முடிவை தமிழ் மக்கள் வரவேற்பதாகவே கருதலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்