ஆப்நகரம்

ராணுவ வீரன் போல சென்னைக்கு வந்திருக்கிறேன்: ஹர்பஜன் தமிழில் ட்வீட்

சென்னை அணிக்கு விளையாட ஆரம்பித்ததும் தமிழ்நாட்டில் அதிகமாகக் கொண்டாடும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். தமிழ்நாட்டு பிரச்னைகள் பற்றி அவ்வப்போது பேசுகிறார். இதெல்லாமே தமிழில் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

Samayam Tamil 16 Mar 2019, 4:25 pm

ஹைலைட்ஸ்:

  • 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் 23ம்தேதி சென்னையில் தொடங்குகிறது.
  • சென்னை அணியில் இணைந்த ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil post_image_e3c6a95
12வது ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் வழக்கம் போல் தமிழில் ட்விட் போட ஆரம்பித்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் 23ம்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

மும்பை அணியிலிருந்து கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த ஹர்பஜன் சிங் தமிழ் ரசிகர்களைக் கவர தொடர்ந்து தமிழில் பதிவிட்டு வருகிறார்.

சென்னை அணிக்கு விளையாட ஆரம்பித்ததும் தமிழ்நாட்டில் அதிகமாகக் கொண்டாடும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். தமிழ்நாட்டு பிரச்னைகள் பற்றி அவ்வப்போது பேசுகிறார். இதெல்லாமே தமிழில் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இதனால் அவருக்கு ஆதரவும் கிடைத்துள்ளது.


இந்நிலையில், "பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய என்னருமை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே உணர்வு தான் என்னுள் இப்போது" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்