ஆப்நகரம்

IND vs ENG: ‘டெஸ்ட் போட்டி’…இந்திய அணி அறிவிப்பு: ஸ்டார் வீரர் நீக்கம்...புஜாராவுக்கு இடம்!

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

Samayam Tamil 22 May 2022, 8:02 pm
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Samayam Tamil இந்திய அணி


கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல், துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 15ஆவது சீசனில் காட்டடி அடித்த தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி: (IND vs ENG: ‘டெஸ்ட் போட்டி’…இந்திய அணி அறிவிப்பு: ஸ்டார் வீரர் நீக்கம்...புஜாராவுக்கு இடம்!)

இதனைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று, கடந்த ஆண்டில் விளையாடமல் விடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் (ஜூலை 1-5) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா, துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடி திறமையை நிரூபித்த அஜிங்கிய ரஹானேவிற்கு இடம் வழங்கப்படவில்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே ஸ்பின்னர்களுக்கான இடத்தில் இடம்பெற்றுள்ளனர். மற்றபடி ரெகுல் வீரர்களுக்கு அப்படியே இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி (இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்): ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த், கேஎல் பரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்தூல் தாகூர், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்