ஆப்நகரம்

ஐசிசி டுவிட்டால் கடுப்பான சாக்ஷி தோனி -எல்லாம் சென்னை ரசிகை பண்ண வேலை

தல தோனி மீது ரசிகர்கள் கொள்ளை அன்பு கொண்டுள்ளனர். பல பெண் ரசிகைகள் அவர் மீது காதலும் வைத்துள்ளனர்.

Samayam Tamil 22 Apr 2018, 4:55 pm
புனே : தல தோனி மீது ரசிகர்கள் கொள்ளை அன்பு கொண்டுள்ளனர். பல பெண் ரசிகைகள் அவர் மீது காதலும் வைத்துள்ளனர்.
Samayam Tamil sakshi-dhoni


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சென்னையில் நடக்க இருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி புனே மைதானத்தில் நேற்று முன் தினம் நடத்து.

இந்த போட்டியின் போது சென்னை ரசிகை ஒருவர் தோனியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு மஞ்சள் நிற சார்ட்டில், “என் வருங்கால கணவர் என்னை மன்னிக்கவும். தோனி தான் எப்போதும் எனது முதல் காதலர். ஐ லவ் யூ தோனி.” என்ற போஸ்டரை காட்டினார்.



ஐசிசி செய்த வேலை:

அந்த பெண் ரசிகையின் போஸ்டரை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்து தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியை கடுப்பேற்றியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்