ஆப்நகரம்

Preity Zinta: அப்பாடா, நல்ல வேளை மும்பை தோத்துருச்சு... பிரீத்தி ஜிந்தாவின் வீடியோவால் பரபரப்பு

நேற்று நடந்த மும்பை - டெல்லி இடையேயான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

Samayam Tamil 21 May 2018, 3:16 pm
புது டெல்லி: நேற்று நடந்த மும்பை - டெல்லி இடையேயான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
Samayam Tamil Priety-Zinta


வாய்ப்பிழந்த மும்பை :
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, கொல்கத்தா அணிகள் முன்னேறிய நிலையில் கடைசி இடத்திற்கு ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், மும்பை அணி போராடி தோற்று வெளியேறியது.

பிரீத்தி ஜிந்தா மகிழ்ச்சி :

இந்நிலையில் 53+ ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற மிக இக்கட்டான நிலையில் களமிறஞ்கிய பஞ்சாப் அணி,சென்னை அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனது.


இந்நிலையில் நேற்று சென்னை - பஞ்சாப் இடையே போட்டி நடைப்பெற்ற போது பிரீத்தி ஜிந்தா, “அப்பாடா நல்ல வேளை மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.” என கூறுவது போன்ற வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்